 கோதையாறு, கொள்ளிடம், வெண்ணாறு, பரம்பிக்குளம் – ஆழியாறு வடிநில பாசன கட்டமைப்புகள், ஒருங்கிணைந்த முறையில்

 கோதையாறு, கொள்ளிடம், வெண்ணாறு, பரம்பிக்குளம் – ஆழியாறு வடிநில பாசன கட்டமைப்புகள், ஒருங்கிணைந்த முறையில் சீரமைக்கப்படும்

 டென்மார்க் நாட்டின் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நிலத்தடி நீர் இருப்பை கண்டறிந்து, அது தொடர்பான வரைபடம் தயாரிக்கப்படும்

 கோவை மாநகராட்சியில் கிடைக்கும் சுத்திகரிக்கப் பட்ட கழிவுநீரை, சூலுார், மதுக்கரை போன்ற கிராமங்களுக்கு எடுத்து சென்று, பாசனத் தேவைக்கு பயன்படுத்தப்படும்

 கன்னியாகுமரி மாவட்டம், உலக்கை அருவியாறு, தென்காசி மாவட்டம் வாலமலையாறு, நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், வீரவநல்லுார் கிராமங்களில், புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்

 நெல்லை மாவட்டம், திசையன்விளை சுற்றுப்பகுதிகளில் வெள்ள நீரை கொண்டு செல்லவும், கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் ஏரி கிழக்கு பிரதான கால்வாயில் இருந்து, 33 ஏரிகளுக்கு நீரை எடுத்துச் செல்லவும், புதிய கால்வாய்கள் அமைக்கப்படும்

 கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு, விளவங்கோடு தாலுகாக்களில், வெள்ள பாதிப்புகளை தடுக்க, 70 கோடி ரூபாய் மதிப்பில், நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்

 தர்மபுரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில், பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ், 100 கோடி ரூபாய் மதிப்பில், 123 கண்மாய்கள் புனரமைக்கப்படும்

 அமராவதி மற்றும் காவிரி ஆறுகள் இணையும் இடத்தில் கிடைக்கும் உபரி நீரை, நீரேற்றம் செய்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார், ஒட்டன்சத்திரம், வேடசந்துார், திண்டுக்கல், நத்தம் தொகுதிகளில் உள்ள குளங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்

 சென்னையின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் மாவட்டம், கொசஸ்தலையாற்றில், நான்கு இடங்களில் ஆற்றுக்குள் நீர்த்தேக்கம் அமைக்கப்படும்

 வேலுார், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பத்துார் மாவட்டங்களில், பாசன கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகள், 129 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்

 ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் அணைக்கட்டு, நெல்லை மாவட்டம் பழவூர் அணைக்கட்டுகள் புனரமைப்பு செய்யப்படும்

 நீர்வளங்களை பாதுகாத்து மேம்படுத்தும் வகையில், நீர்வளத் துறைக்கு சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம் கட்டப்படும்

 திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, ராமநாதபுரம், தென்காசி, திருப்பத்துார், விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களில், 184 கோடி ரூபாய் மதிப்பில், ஒன்பது அணைக்கட்டுகள் கட்டப்படும்

 கன்னியாகுமரி மாவட்டம், அழிக்கால், இரவிபுத்தன்துறை, மணக்குடி, கோவளம், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில், 12 இடங்களில், கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்

 இரண்டாம் கட்டமாக, கல்லணை கால்வாய் புனரமைப்பு பணிகள், 400 கோடி ரூபாய் மதிப்பில், 2.30 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும்

 சாத்தனுார், சோலையாறு, மேட்டூர், பாபநாசம் உட்பட, 64 பெரிய அணைகள் புனரமைக்கும் பணிகள், 300 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

நீ ர்வளத் துறையின் பல பணிகளுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. ஏற்கனவே நடந்த பணிகளுக்கு 40 சதவீதம் வரை கமிஷன் கைமாறியதால், முறையாக வேலை நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அறிவித்து இன்னும் செயல்பாட்டிற்கு வராதவற்றின் விபரம்:

Source link