10 நாட்களுக்குப் போர் நிறுத்தம்; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் முடிவு

ஈரான் – அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான உயிர் இழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 

அதே நேரத்தில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இஸ்ரேலின் முக்கிய கட்டமைப்புகள் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிர் இழப்புகள் மட்டுமல்லாமல் மிகப் பெரிய அளவிலான பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  

இதற்கிடையில், ஹார்மோஸ் நீரிணை பாதையை ஈரான் மூடியுள்ளது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் கிடைக்காமல், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த பாதையைத் திறக்க ஈரானுக்கு அமெரிக்கா 48 மணி நேரம் அமெரிக்கா கெடு விதித்திருந்தது. இதற்கு, ஈரான் மறுப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஐந்து நாட்களுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டாமென தனது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக ஈரானுக்கு 15 நிபந்தனைகளை அமெரிக்கா முன் வைத்தது . ஈரான், இந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டது. இருப்பினும், ஈரானுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால், இதைத் தொடர்ந்து ஈரான் மறுத்து வருகிறது. இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,  “வரும் ஏப்ரல் 06 வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், ஈரானுடன் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

Source link