19 மாநிலங்கள், மத்திய அரசு என்னை எதிர்கொள்ள ஒற்றிணைந்துள்ளன: மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சுரி என்ற பகுதில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி 19 மாநிலங்களில் ஆட்சி செய்கின்றன. இந்த 19 மாநிலங்களும், மத்திய அரசும் என்னை எதிர்கொள்ள ஒன்றிணைந்துள்ளன. ஆனால் சாதாரண மக்களுக்கான நான் தனியாளாக போராடி வருகிறேன். டெல்லியில் இருந்து வரும் படைகளை பயன்படுத்தி மேற்கு வங்க தேர்தலில் பாஜக வெற்றி பெற முடியாது. மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 226 இடங்களுக்கு மேல் பிடிக்கும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

294 இடங்களை கொண்ட மேற்கு வங்கத்தில் வருகிற 23-ந்தேதி மற்றும் 29-ந்தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

Source link