2வது குழந்தைக்கு ஊக்கத்தொகை! ஆந்திராவில் கருவுறுதல் விகிதத்தை, 1.5 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்கும் தம்பதிக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகை அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். இது, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்
மக்களுக்கு துரோகம்! பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், ராஜ்யசபாவில் போட்டியிடுவது மூலம் மக்கள் அளித்த தீர்ப்புக்கு பா.ஜ., துரோகம் இழைத்துள்ளது. இதைத் தான், தேர்தலுக்கு முன் நாங்கள் சுட்டிக்காட்டினோம். இதர பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்களை சேர்ந்த ஒரு தலைவர் உயர் பதவி வகிப்பதை பா.ஜ.,வினர் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரிய ஜனதா தளம்
துரதிருஷ்டவசமானது! ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியது துரதிருஷ்டவசமானது. கடற்படைப் பயிற்சிக்காக வந்த அவர்கள் நம் விருந்தினர்கள். அவர்கள் திரும்பி சென்றபோது தாக்கப்பட்டனர். இந்த இக்கட்டான சூழலுக்குள், நம் நாடும் சிக்கும் அபாயம் உள்ளது. ஒமர் அப்துல்லா ஜம்மு – காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி
