கோவை: சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோர், 40 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் செய்யும் ஒவ்வொரு செலவுக்கும் வரம்பு நிர்ணயித்து, விலை மற்றும் கட்டண பட்டியல் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலை பின்பற்றினால் ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்வது அம்பலமாகுமே என்று கட்சிகள் பதற்றம் அடைந்துள்ளன.
டீ, காபி, இட்லி விலையில் ஆரம்பித்து மேடை அமைப்பது, பந்தல் போடுவது, போஸ்டர் அச்சடிப்பது, பிட் நோட்டீஸ் வினியோகிப்பது, சேர் வாடகை, மைக் செட், டாக்சி, வேன், டிரைவர் சம்பளம், மண்டபத்தில் தங்க வைப்பது, தோரணம் கட்டுவது உள்ளிட்ட ஒவ்வொரு செலவுக்கும் வரம்பு நிர்ணயித்துள்ளது.
”நாற்காலி வாடகை ரூ.10, வி.ஐ.பி. சேர் வாடகை ரூ.280 என்பது ஜாஸ்தி. மொத்தமாக உணவு ஆர்டர் செய்து தொண்டர்களுக்கு கொடுக்கும்போது செலவு குறைவாக இருக்கும்.
ஆணையம் பட்டியலில் எல்லாமே அதிகமாக இருக்கிறது. இது நடைமுறைக்கு பொருந்தாது” என்று திமுக நிர்வாகி அன்புசெழியன் கூறினார். ஆணையத்திடம் முறையிட போவதாக தெரிவித்தார்.
