2.38 லட்சம் கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்

புதுடில்லி: எஸ்400 வான் பாதுகாப்பு கவச வாகனம் முதல், போர் விமானங்கள், டிரோன் வரையில் ராணுவம்,விமானப்படை மற்றும் கடலோர காவல்படைக்கு தேவையான தளவாடங்களை 2.38 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான திட்டத்துக்கு பாதுகாப்பு கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில்(டிஏசி) கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். 2.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு நாட்டின் பாதுகாப்பு தயார் நிலையை வலுப்படுத்தும். ராணுவத்துக்காக வான் பாதுகாப்பு கண்ககாணிப்பு அமைப்பு, பீரங்கி குண்டுகள், தனுஷ் பீரங்கி துப்பாக்கி அமைப்பு ஆகியவை கொள்முதல் செய்யப்பட உள்ளன. 2025- 26ம் நிதியாண்டில் 6.73 லட்சம் கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ராணுவம்

ராணுவத்தை நவீனமயமாக்கும் வகையிலும், களத்தில் திறனை வலுப்படுத்தும் வகையிலும் பல்வேறு தளவாடங்கள் வாங்க டிஏசி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதில் முக்கியமானது வான் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு. இது வான்பாதுகாப்பு கட்டுப்பாடு மற்றும் தகவல்களை துல்லியமாக வழங்கும். மேலும், நம்பகமான மற்றும் பாதுகாப்பான தொலைதொடர்புக்கு உயர் அலைவரிசை கொண்ட ரேடியோ அமைப்பும் அடக்கம்.

விமானப்படை

தற்போது விமானப்படையில் பயன்படுத்தப்படும் ஏன் 32 மற்றும் ஐஎல் 76 ரக விமானங்களுக்கு பதிலாக 18 முதல் 30 டன் எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்லும் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன. மேலும், முக்கியமான காலகட்டங்களில் வான் வழியாக வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க எஸ் 400 வான் பாதுகாப்பு கவசம் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Source link