20 ஆண்டு கழித்து ரீ ரிலீஸாகும் விஜய்யின் ஹிட் படம்!

பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் ‘சிவகாசி’. ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த இப்படத்தில் நாயகியாக அசினும் வில்லனாக பிரகாஷ் ராஜும் நடித்திருந்தனர். இவர்களோடு வெங்கட் பிரபு, எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீகாந்த தேவா இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்தின் தந்தை இசையமைப்பாளர் தேவா பின்னணி இசையை கவனித்திருந்தார். 

காமெடி, காதல், அரசியல், பாசம் என கமர்ஷியல் அமசங்கள் நிறைந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் தற்போது 20ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸாகிறது. வரும் ஏப்ரல் 24ஆம் தேதி டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு வெளியாகிறது. விஜய் தற்போது அரசியல் களத்தில் பிஸியாக இருப்பதால் அவரது ரசிகர்களும் அதிலே அதிக கவனம் செலுத்துகின்றனர். அது போக அவரது கடைசிப் படமான ஜன நாயகன் படம் சிபிஎஃப்சி சான்றிதழ் பெற முடியாத காரணத்தால் இன்னும் ரிலீஸாகவில்லை. 

இந்த சூழலில் இப்படம் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதாவது விஜய்யை நீண்ட மாத இடைவெளிக்குப் பிறகு பெரிய திரையில் பார்க்கலாம் என ஆர்வத்தில் இருக்கின்றனர். ஏற்கனவே விஜய்யின் கில்லி ரீ ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Source link