200 சொன்னோம், அதைவிட அதிக தொகுதிகளில் ஜெயிப்போம்; முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நாங்கள் 200 தொகுதிகள் என்று சொன்னோம், இப்போது அதைவிட அதிக தொகுதிகள் வெல்வோம் என்று திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார். பின்னர் வாகனத்தில் ஏறி புறப்பட்டார். அப்போது அவரை சூழ்ந்துகொண்டு நிருபர்கள் கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு;

நிருபர்; எத்தனை தொகுதிகளில் திமுக ஜெயிக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது?

முதல்வர் ஸ்டாலின்; நாங்கள் 200 என்று சொன்னோம். ஆனால் அதைவிட அதிகமாக தான் ஜெயிக்க போகிறோம். நேற்றைய தினம் தேர்தல் அறிக்கை வெளியிட்டதற்கு பிறகு, 200ஐ தாண்டு என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கிறது.

நிருபர்; கொளத்தூர் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

முதல்வர் ஸ்டாலின்; நான் இப்போது ஒரு புக்(book) கொடுத்திருக்கிறேன். நான் இருந்த காலத்தில் எவ்வளவு செய்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். வந்ததற்கு பின்னால் என்னவெல்லாம் செய்ய போகிறேன் என்று அதில் சொல்லி இருக்கிறேன்.

கேள்வி; தேர்தல் அறிக்கையை நேற்று கொடுத்துள்ளீர்கள். அது எந்தளவுக்கு மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது? எவ்வளவு நம்பிக்கை கொடுக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?

முதல்வர் ஸ்டாலின்; திமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே பெருமளவுக்கு பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது.

கேள்வி; முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்?

முதல்வர் ஸ்டாலின்; அதை பாருங்கள்… முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் கவர்னர் மாளிகையில் பதவியேத்துக்கிட்டு கோட்டைக்கு வந்து போடும்போது அப்போது சொல்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

Source link