2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடருக்காக ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் செயல் திறனை கண்காணிக்க திட்டம்

புதுடெல்லி: ஐசிசி ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு அக்​டோபர்​-நவம்​பர் மாதங்களில் தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்​வே, நமீபியா நாடு​களில் நடை​பெற உள்​ளது. இன்​னும் ஒரு வருடம் உள்ள நிலை​யில், இந்த தொடருக்​கான அணியை கட்​டமைக்​கும் முயற்​சி​யில் இந்​திய அணி​யின் தேர்​வுக்​குழு​வினர் களமிறங்கி உள்​ளனர்.

இந்த வகை​யில், 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்​கான இந்​திய அணி​யின் 20 சாத்​தி​ய​மான வீரர்கள் ஏற்​கெ​னவே அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளனர். இவர்​களின் செயல் திறன்​களை வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரின் போது, அஜித் அகர்​கர் தலை​மையி​லான தேர்​வுக்​குழு​வினர் கூர்ந்து கவனிப்பார்கள் என்று பிசிசிஐ வட்​டாரங்​கள் தெரிவித்துள்ளன.

Source link