“210 தொகுதிகளில் வெல்லுவோம்” – வேட்புமனுவைத் தாக்கல் செய்த பிறகு இ.பி.எஸ். பேட்டி!

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், இன்றுடன் (06.04.2026) நிறைவு பெறவுள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

இதற்கிடையே சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட இன்று (06.08.2026) வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதாவது எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது மனுவைச் சமர்ப்பித்தார். 

இதன் மூலம் இந்தத் தொகுதியில் அவர் 8வது முறையாகப் போட்டியிட உள்ளார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வைக்கின்ற அதிமுக கட்சியினுடைய சார்பாக எடப்பாடி சட்டமன்றத் தொகுதியிலே போட்டியிடுவதற்கு நான் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 234 தொகுதியில் 210 தொகுதியில் வெல்லுவோம்” எனத் தெரிவித்தார். 

Source link