“234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது”

புதுக்கோட்டை: “200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று ஏற்கெனவே தெரிவித்து இருந்தோம். தற்போதுள்ள மக்கள் வரவேற்பையும், கூட்டத்தையும் பார்க்கும்போது, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற  நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,” என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் திருமயம் எஸ்.ரகுபதி, ஆலங்குடி சிவ.வீ.மெய்யநாதன், புதுக்கோட்டை வை.முத்துராஜா, விராலிமலை கே.கே.செல்லபாண்டியன், கந்தர்வக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.சின்னதுரை மற்றும் அறந்தாங்கியில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து இன்று (ஏப்.11) புதுக்கோட்டையில் மாலை  4 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதையடுத்து, தஞ்சாவூரில் நேற்று பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு புதுக்கோட்டை சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கினார்.

Source link