க டந்த 2023ம் ஆண்டு நவ., மாதத்துக்கு பின், முதல்முறையாக ‘வெள்ளி இ.டி.எப்.,’ திட்டங்களில் இருந்து முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை திரும்ப பெற்றுள்ளனர்.
2026 ஜனவரியில் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ வெள்ளி 4 லட்சம் ரூபாய் என்ற இமாலய இலக்கை தாண்டியது. இதனால் ஒரே மாதத்தில் 9,463 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு குவிந்தது. ஆனால், ஜன., இறுதியில் ஒரே நாளில் வெள்ளி விலை கிட்டத்தட்ட 27 சதவீதம் வரை சரிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பிப்ரவரியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாகி, கிட்டத்தட்ட 5,455 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை விற்று வெளியேறியுள்ளனர். அதே நேரத்தில் கிட்டத்தட்ட 4,628 கோடி ரூபாயை முதலீடும் செய்துள்ளனர். ஆக, நிகர வெளியேற்றம் 826 கோடி ரூபாயாக உள்ளது.
