29 படத்தின் புதிய சிங்கிள்: சில்க் ஸ்மிதா போஸ்டர் வெளியீடு. Rathna Kumar’s 29 New Single: Silk Smitha Poster Released

2017-ஆம் ஆண்டு வெளியான `மேயாத மான்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார். இதன்பின் இவர் `ஆடை’, `குலுகுலு’ போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் `மாஸ்டர்’, `விக்ரம்’, `லியோ’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.

இதனை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் `ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ‘ஜீ-ஸ்குவாட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். இந்தப் படம் “29” என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் இடம்பெறும் “சீலே சீலே” பாடல் கடந்த மாதம் வெளியானது.

Source link