3வது டி20: வைபவ் சூர்யவன்ஷி அரைசதம்.. இந்திய அணி 192 ரன்கள் குவிப்பு

ஹராரே,

இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்தியா 2-0 என தொடரை வென்றுள்ளது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார்.ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து நிலைத்து விளையாடிய அவர் 81 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினார்.

அவருக்கு துணையாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் 29 ரன்கள் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முக்கியமான கட்டத்தில் 27 ரன்கள் எடுத்து அணிக்கு உறுதுணையாக இருந்தார்.

இதன் மூலம் இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.

Source link