3 ஆண்டுகள்.. 1,500 வெடிகுண்டு மிரட்டல்.. இந்தியாவை நடுங்க வைத்த நபர்- சென்னையில் சிக்கியது எப்படி? – india bomb threat email case sharath subramaniam shankar chennai airport arrest

இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள் முக்கிய பிரமுகர்களின் வீடுகள், கல்வி நிறுவனங்கள்,பள்ளிக்கூடங்கள் ,சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட வீடுகளுக்கு ஈமெயில் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.ஆனால் விசாரணையில் ஈமெயில் எங்கிருந்து வந்தது யார் அனுப்பினார்? எப்படி அனுப்பினார் என்பது எந்த ஒரு தகவலும் தெரியாமல் காவல்துறையினர் தெனரி வந்தனர்.

3 ஆண்டுகளாக வெடிகுண்டு மிரட்டல்

இந்த சூழலில் சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் பல்வேறு பிடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் வரை நாடு முழுவதும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் அனுப்பப்பட்டது. குறிப்பாக ஒவ்வொரு முறையும் ஈமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வரும்பொழுது எல்லாம் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவிகளுடன் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபடுவர்.

தவெக கொடி கலரில் அரசு மின் பஸ்? உண்மை என்ன?

ஆனால் அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்ட பிறகு இறுதியில் அந்த மிரட்டல் பொய் என்று தெரியவரும் .இதனால் பொதுமக்களும் காவல்துறையினரும் ஒரு விதமான நெருக்கடியை சந்தித்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாநில நாடு முழுவதும் இருக்கும் மாநில காவல் நிலையங்களிலும் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் ஈமெயில் விடுக்கப்பட்ட மிரட்டல்கள் அனைத்தும் விபிஎன் மற்றும் ட்ராக் வெப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு

இதனைத் தொடர்ந்து குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிப்பது போலீசாருக்கு கடும் சவாலாக இருந்தது. இருப்பினும் சைபர் கிரைம் போலீசார் மற்றும் மாநில காவல் துறையினர் பல மாதங்களாகவே தொழில்நுட்ப ரீதியான கண்காணிப்பை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். ஒரு கட்டத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நபர் ஒருவர் தனது சொந்த ஈமெயில் முகவரியை பயன்படுத்தி மிரட்டல் அனுப்பியதை விசாரணையில் கண்டுபிடித்தனர்.

அதன் மூலம் அந்த நபர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரத் சுப்பிரமணியம் சங்கர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டின் நகரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சரத் சுப்பிரமணியம் சங்கர் தேடப்படும் குற்றவாளியாக சைபர் கிரைம் போலீசார் அறிவித்தனர். அவரது விபரங்கள் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கும் காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது.

சென்னையில் சிக்கியது எப்படி?

இந்த சூழலில் அவர் அமெரிக்காவில் இருந்து அபுதாபி வழியாக சென்னை வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் குடியுரிமை அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்க்கும் போது அவர் தேடப்பட்டு வரும் நபர் என்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக இது குறித்து சென்னை மாநகர காவல் துறை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்த சரத் சுப்பிரமணியம் சங்கரை கைது செய்து நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் ஈமெயில்களை அனுப்பியதை அவர் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் வந்தால் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறியும் ஆர்வத்தில் இதை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சரத் சுப்பிரமணியம் சங்கரை நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்திய காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

Source link