3 ஐஏஎஸ் இன், 3 ஐஏஎஸ் அவுட் – டெல்லிக்கு பறக்கும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் – 3 ias in 3 ias out swapping officers from central to tamilnadu viceversa

கடந்த காலத்தில் Electronics Corporation of Tamil Nadu Ltd (ELCOT) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், கூடுதலாக e-Governance இயக்குநராகவும் இருந்தவர் கே.பி.கார்த்திகேயன்.

கடந்த அக்.6, 2026 அன்று தமிழக அரசு 3 IAS-களை மாற்றியது. அதில் K.P.கார்த்திகேயன் பேரூராட்சிகள் இயக்குநர் (Director of Town Panchayats) ஆக மாற்றப்பட்டார். அதாவது இப்போது டெல்லி உத்தரவு வரும் போது அவர் பேரூராட்சிகள் இயக்குநராக இருந்தார். அந்த பதவியில் இருந்து தான் இப்போது மத்திய அரசுப் பணி நிமித்தமாக டெல்லிக்கு செல்ல உள்ளார்.

கே.பி.கார்த்திகேயன் நெல்லை முன்னாள் ஆட்சியராகவும், TNeGA-ல் முக்கிய பதவிகளிலும் இருந்தவர்.

கடந்த 5 மாதத்தில் டெல்லிக்கு சென்ற தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்

கடந்த 5 மாதத்தில் அதாவது மே மாதம் முதல் அக்டோபர் 2026 வரை தமிழகத்தில் இருந்து மத்திய பணிக்கு சென்றவர்கள் விவரம் பின்வருமாறு, வினீத் எஸ் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் துணைச் செயலாளராக மாற்றப்பட்டார். பிரசாந்த் என்.எஸ். அமைச்சரவை செயலகத்தின் துணைச் செயலாளராக மாற்றப்பட்டார். இவரையும் உடனடியாக விடுவிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. தற்பொழுது கார்த்திகேயன் கே.பி.யை பொருளாதார விவகாரங்கள் துறை துணைச் செயலாளர் பதவிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஆஷிஷ் சட்டர்ஜிக்கு தமிழ்நாடு அரசில் என்ன பதவி?

எக்கு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும், பொருளாதார ஆலோசகராக இருந்த ஆஷிஷ் சட்டர்ஜியை தமிழ்நாடு அரசுப் பணிக்கு கோரியதால் premature repatriation செய்யப்பட்டுள்ளார். டெல்லி வித்யாலயா கமிட்டியில் ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி முதலில் நில நிர்வாக ஆணையராகவும், பின்னர் அக்.9, 2026 முதல் TNPDCL CMD & Chairman-ஆக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். விஷ்ணு சந்தரன் வெளிநாட்டு பணியில் இருந்து ELCOT இயக்குநராக பதவியேற்றுள்ளார். K.P.கார்த்திகேயன் விட்டுச்சென்ற இடத்தில் பணியாற்றி வருகிறார்.ஆஷிஷ் சட்டர்ஜிக்கு தமிழ்நாடு அரசுஎன்ன பதவி அளிக்கப்போகிறார்கள் என்பது தான் தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.

Source link