3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெல்லியில் பாலம் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று (மார்ச் 18) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் மூவர் காயமடைந்ததாகவும் டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டிடத்துக்குள் சிக்கியவர்களை அவர்கள் மீட்டனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவரும்.

முதல்வர் ரேகா குப்தா, இந்த தீ விபத்து குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்து குறித்து அறிந்து மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக பதிவிட்டுள்ளார்.

Source link