32,000 பேரைக் கொன்றது ஈரான்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு புகார்

வாஷிங்டன்: ஈரான் அரசுக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தில், 32,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடும் விலைவாசி உயர்வை எதிர்த்து அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களை ஒடுக்க, ஆட்சியாளர் மதகுரு அயதுல்லா அலி கமேனி அரசு அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் வாயிலாக நடவடிக்கை எடுத்தது. இதில், பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

மனித உரிமைகளை மீறும் வகையில், ஈரானில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாகவும், இந்நடவடிக்கையை ஈரான் அரசு நிறுத்தாவிட்டால் அப்பாவி மக்களை காப்பாற்ற அமெரிக்கா, ராணுவ நடவடிக்கையில் ஈடுபட தயங்காது என்றும் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததார்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, ஈரானுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் அதிபர் டிரம்ப் கூறியுள்ளதாவது:ஈரானிய மக்கள் கடுமையான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். நியாயமான காரணங்களுக்காக போராடி வரும் அந்நாட்டு மக்கள் மீது கொடூரமான தாக்குதலை ஏவி, குறுகிய காலத்தில் 32,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்படாவிட்டால், கமேனி மற்றும் அவரது மகன் மொஜ்தபா கமேனி ஆகியோரை கொல்வதற்கு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.

Source link