35 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்த நடிகர் நானா படேகர்: ஆனால் விவாகரத்து மட்டும் செய்யல

நானா படேகர் இறுதிச்சடங்கு:பிரபல நடிகரான நானா படேகர்நேற்று காலை 5.20 மணிக்கு கோவாவில் இருக்கும் தன் இல்லத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் இருக்கும் தோஞ்சே கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டு வளாகத்தில் நானா படேகரின் இறுதிச் சடங்கு நடந்தது.

மகாராஷ்டிரா மாநில அரசு மரியாதையுடன் நடந்த இறுதிச் சடங்கில் பாலிவுட் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டார்கள். நானா படேகருக்கு நீல்காந்தி என்கிற மனைவி இருக்கிறார். நீல்காந்தி ஒரு பிரபலமான நடிகையாவார். நானா படேகருக்கும், நீல்காந்திக்கும் 1978ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு மல்ஹர் படேகர் என்கிற மகன் இருக்கிறார்.

ஆனால் அந்த திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நானாவும், நீல்காந்தியும் பிரிந்துவிட்டார்கள். சுமார் 35 ஆண்டுகளாக பிரிந்து தான் வாழ்ந்தார்கள். மனைவியை பிரிந்த போதிலும் அவரை விவாகரத்து செய்யவில்லை நானா படேகர். இருவரின் பர்சனாலிட்டியும் மாறிவிட்டதால் பிரிந்துவிட்டதாக நானா படேகரே பல முறை கூறியிருக்கிறார். பெரும்பாலான வருடங்கள் பிரிந்து வாழ்ந்தபோதிலும் நானா படேகர் மனைவியாகவே இருந்து வந்தார் நீல்காந்தி. அவர் தங்கள் மகன் மல்ஹர், நானா அம்மாவுடன் வசித்து வந்தார்.

மூத்த மகன் மரணம்: நானா, நீல்காந்தியின் மூத்த மகன் துர்வாசாவுக்கு இரண்டரை வயது இருந்தபோது இறந்துவிட்டார்.மகனின் மரணம் குறித்து முன்பு நானா படேகர் கூறியதாவது, என் மகனுக்கு இரண்டரை வயது இருந்தபோது இறந்துவிட்டான். அவன் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தான். நான் அழ மாட்டேன். படங்களில் மட்டும் தான் அழுவேன். மகன் இறந்தபோது அழவில்லை. ஆனால் அந்த சோகத்தில் தினமும் சுமார் 60 சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். குளிக்கும்போது கூட தம்மடித்தேன். அது நல்ல விஷயம் கிடையாது. சிகரெட் வாடையால் யாரும் என்னுடன் சேர்ந்து காரில் வர மாட்டார்கள். நான் அதிகமாக மது அருந்தியது இல்லை, ஆனால் அதிகமாக புகைப்பிடித்திருக்கிறேன் என்றார்.

மகன் விளக்கம்: நானா படேகரின் இறுதிச் சடங்கு நேற்று இரவு நடந்தது. ஏன் இப்படி இரவோடு இரவாக இறுதிச் சடங்கை நடத்தினீர்கள் என்று மகன் மல்ஹர் படேகேரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது, இன்று காலை தான் அப்பா இறந்தார் என்பதால் அன்றே அவரின் இறுதிச் சடங்கை நடத்த முடிவு செய்தோம் என்றார். நானா படேகரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பாலிவுட் பிரபலங்கள் பலரும் காத்திருந்த நிலையில் இரவோடு இரவாக இறுதிச் சடங்கு முடிந்துவிட்டது.

நானா படேகர் இறந்தபோது புனேவில் இருந்த மல்ஹர் உடனே விமானம் மூலம் கோவா சென்றரா். அப்பாவின் உடலை சிறப்பு விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் பலரும் சமூக வலைதளங்களில் நானா படேகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நானா படேகருடன் சேர்ந்து வேலை செய்தவர்கள் எல்லாம் அவர் இறந்த அதிர்ச்சியில் இருந்து வெளிய வர முடியாமல் இருக்கிறார்கள். ரசிகர்களோ, நல்லா இருந்த மனுஷனுக்கு இப்படி மாரடைப்பால் மரணம் வந்துவிட்டதே. பிரபலங்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது வருத்தமாக உள்ளது என்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

மூன்று தேசிய விருதுகளை வென்ற நானா படேகர் இடத்தை நிரப்ப இனி யாரும் பிறந்து கூட வர முடியாது என ரசிகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

Source link