35 வயது நபர் கொலை:65 வயது நபருக்கு 'காப்பு'

குருகிராம்:குருகிராமில், விவசாய நிலம் தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, 35 வயது நபரை கொன்றதாக, 65 வயது நபர் போலீசில் சிக்கியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகர் என்ற இடத்தை சேர்ந்த கேம்சந்த் என்பவர், ராகுல் குமார் என்பவரை தாக்கி கொன்றதாக கூறப்படுகிறது. அரிவாளால் ராகுல்குமாரின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அவர் கைது செய்யப்பட்டார்.

உ.பி.,யில் கொலையை செய்து விட்டு, டில்லியில் தலைமறைவாக இருந்த கெம்சந்த்தை கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர். இருவருக்கும் இடையேயான முன் விரோதத்தில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

கொலையான ராகுல்குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், கொலை குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Source link