படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார்.
தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியானது முதல் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் 4 நாட்களில் ‘யூத்’ திரைப்படம் உலகளவில் ரூ.28.3 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
