40 நாட்கள்; 4000 கி.மீ பயணம்; 234 தொகுதிகள் – பயணத்தை தொடங்கிய VIKATAN ELECTION EXPRESS|40 Days; 4000 km Journey; 234 Constituencies – Vikatan Election Express Begins Its Journey

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கள நிலவரங்களை மக்களிடம் இருந்து நேரடியாக பெற்று், அதை உங்களிடம் சேர்க்க விகடனின் ‘The Imperfect Show’ குழுவினர் தயாராகிவிட்டனர்.

இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘IPS VIKATAN ELECTION EXPRESS 2026’ வாகனத்தை, விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா. சீனிவாசன் அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அடுத்த சில வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் இந்த வாகனம் வலம் வரவுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களின் மனநிலை, தொகுதி வாரியான பிரச்னைகள் மற்றும் அரசியல் மாற்றங்களை சுவாரசியமாகவும் நேர்த்தியாகவும் வீடியோக்களாக இக்குழுவினர் வழங்க உள்ளனர்.

தேர்தலை ஒரு புதிய கோணத்தில் அணுகும் இந்த பயணம், வாசகர்களுக்கு ஒரு முழுமையான கள அனுபவத்தைத் தரும்!

Source link