41 பேர் பலியான கரூர் சம்பவத்தில் சிறை சென்ற தவெக மதியழகன்; எம்எல்ஏ சீட் தந்த விஜய்

சென்னை: 41 பேர் பலியான கரூர் துயர சம்பவத்தில் கைதாகி சிறை சென்ற தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் தவெகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

நாடு முழுவதும் இன்றளவும் பேசப்படும் துயர சம்பவங்களில் இருப்பது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம். தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 41 பேர் பலியாகினர். தவெகவுக்கு பெரும் பின்னடைவை தந்த இந்த சம்பவம் குறித்து சிபிஐ வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.

இந்த சம்பவத்தில் கட்சியின் பல முக்கிய நபர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டாலும், போது கரூர் தவெக மாவட்ட செயலாளராக இருந்த மதியழகனும், அவருடன் மற்றொரு நிர்வாகி ஒருவருமே கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கில் மதியழகன் ஜாமீனில் உள்ளார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந் நிலையில், மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு கரூர் தொகுதியில் போட்டியிட விஜய் வாய்ப்பு அளித்துள்ளார். இன்றைய வேட்பாளர்கள் பட்டியலில் அவரின் பெயரும் இடம்பெற்று இருந்தது, கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

Source link