5 தொகுதி ​இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக: மு.க.ஸ்டாலின் போட்ட மீட்டிங் – தவெக.,வை வீழ்த்த வியூகம் ரெடி – tamil nadu five constituency by-election 2026 mk stalin dmk strategy in-charges for karur and perundurai

​தமிழகத்தில் மீதமுள்ள  5 தொகுதி இடைத்தேர்தல்  அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் பணிகளை திமுக தரப்பில் இப்போதே தொடங்கிவிட்டதாக கூறப்பட்டுகிறது. அந்த வகையில் தேர்தல் பொறுபாளர் நியமனம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

​தமிழகத்தில் மீதமுள்ள ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடத்தப்படலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், திமுகவின் தேர்தல் வியூகம் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அம்பாசமுத்திரம் விராலிமலை திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதி விளக்கு முக்கிய நிர்வாகிகளுக்கு பொறுப்பை பிரித்து வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

​

5 தொகுதி இடைத்தேர்தல் களம்

தமிழ்நாட்டில் மிகவும் எதிர்ப்பார்பில் உள்ளது 5 தொகுதி இடைத்தேர்தல் களம். தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றாலும், திமுக 2-வது இடத்தை பிடித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. காரணம் முதல்வர் விஜய் வீடு வீடாக சென்றும், ஊர் ஊராக சென்று முருங்கைகாய் பறித்தது, டிராக்டர் ஓட்டினார். மேலும் ஒரு தொகுதிக்கு சுமார் 7 மணி நேரம் செலவு செய்து 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடிந்தது. ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் இல்லாமல் தனித்து போட்டியிட்டது. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினின் ஆபாச பேச்சுகளை தாண்டி , திமுகவுக்கு 33 சதவீத வாக்குகள் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் திமுக செல்வாக்கு மக்களிடம் குறையவில்லை என்று அக்கட்சித் தலைமை கணித்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளிலும் வென்ற அதிமுக, இடைத்தேர்தலில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனை

இதனால் உற்சாகமடைந்த திமுகவினர் அடுத்த 5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் நேற்று கரூர் தொகுதியில் அசோக்குமார்,விராலிமலை தொகுதியில் எம்.எம்.அப்துல்லா, அம்பாசமுத்திரம் தொகுதியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் களமிறக்க உள்ளதாக திமுக வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் திமுக தலைவர் ஸ்டாலின், 5 தொகுதி நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இது சாதாரண ஆலோசனை அல்ல.இந்த ஆலோசனையில் 5 தொகுதி நிர்வாகிகளுடன் சேர்ந்து செந்தில் பாலாஜி, கே.என்.நேரு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் (OPS) ஆகியோரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.. இது தான் இப்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

யாருக்கு எந்த தொகுதி? – ஸ்டாலின் பிரித்து கொடுத்த பொறுப்பு

ஆலோசனையில் கிடைத்த தகவலின் படி,கரூர் மற்றும் பெருந்துறை தொகுதிகள் செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் கே.என்.நேரு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதி OPS வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆலோசனையின் போது ஸ்டாலின் நேரடியாகவே,5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். அதனால் திமுகவினர் இடைத்தேர்தலுக்கு தயாராக வேண்டும். இடைத்தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும். தொகுதியில் மக்களிடம் நன்கு அறிமுகமான வேட்பாளர் பட்டியலை தலைமைக்கு அனுப்பி வையுங்கள்”என்று அறிவுறுத்தியுள்ளார்.

திமுகவின் கணக்கு என்ன?

ஏற்கனவே பெருந்துறை தொகுதியில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே திமுகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட இருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்த 5 தொகுதி இடைத்தேர்தலிலும் கூட திமுக இழப்பதற்கு எதுவும் இல்லை. ஏதாவது ஒரு தொகுதியில் திமுக வென்றால் கூட, அது தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படும் என்பதால் திமுக மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. மேலும் திமுகவின் வியூகம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சற்று சவாலாக தான் இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Source link