5 தொகுதி இடைத்தேர்தல் சாத்தியமா?மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் பின்னணி என்ன? – by-elections for 5 constituencies: what is the background behind m.k. stalin’s announcement

தமிழகத்தில் மீதமுள்ள ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் அதற்காக உடனே தேர்தல் பணிகளை தொடங்குமாறு திமுக தொண்டர்களுக்கு மு க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஐந்து தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னால் இருக்கும் சட்ட சிக்கல்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் தற்பொழுது 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த சாத்திய கூறுகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழக மட்டுமின்றி டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எஸ். ஐ .ஆர் நடைமுறைக்கு எதிராகவும், இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி போராட்டங்கள் வலுத்து வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமை தேர்தல் அதிகாரி பதவி விலக வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டம் நடைப்பெற்றது. இதில் தவெக, அதிமுக, திமுக உள்ளிட்ட 12 கட்சிகள் கலந்துக்கொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

எஸ்.ஐ. ஆர் விவகாரத்தில் இருக்கும் சட்ட சிக்கல்

மேலும், தற்பொழுது தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை (Special Summary Revision – SSR) தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் முடிவடையாமல் உடனடியாக தேர்தலை அறிவிக்க முடியாது. குறைந்தது இன்னும் ஆறு மாத காலத்திற்கு இடைத்தேர்தல் தள்ளிபோக வாய்ப்புகள் அதிகம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.எஸ்.ஐ .ஆர் விவகாரத்தில் சிக்கல்கள் பல களத்தில் நிலவி வருகிறது. சூழ்நிலை இவ்வாறாக இருப்பின் எந்த நேரமும் தேர்தல் வரலாம் என்று மு .க. ஸ்டாலின் கூறுவது எந்த வகையிலும் பொருந்தவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரம்

அதேபோல் மறுபுறம் இடைத்தேர்தலை நடத்துவதில் மிகப்பெரிய மொட்டுக்கட்டையாக இருப்பது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள்தான். குறிப்பாக கரூர், பெருந்துறை ,அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதற்கிடையே,சபாநாயகர் ராஜினாமா கடித்தத்தை ஏற்றுக்கொண்டது என்று செல்லும் என்று நீதிமன்றம் அறிவித்தாலும், கட்சி தாவல் மற்றும் குதிரைபேர வழக்கு இறுதி விசாரணை முடிவடைந்துள்ளது. இருப்பினும் நீதிமன்றம் தனது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியாகி, அந்த 5 தொகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையம் முறைப்படி காலியானதாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே இடைத்தேர்தலை நடத்த முடியும். இத்தகைய சட்ட சிக்கல்கள் நீடிக்கும் போது எந்த சட்ட அடிப்படையில் இல்லாமல் மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தல் பற்றி பேசுவது அரசியல் யதார்த்தத்தை மறைப்பதாகவே அமைகிறது.

முடிந்துபோன விவகாரத்தை மீண்டும் கிளப்புவது ஏன்?

தமிழக அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருமே இப்போதைக்கு இடைத்தேர்தல் வராது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இடைத்தேர்தல் திடீரென திமுக தலைமை இதனைத் தூண்டிவிடுவது ஏன் என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுர இடைத்தேர்தலில் திமுக வாக்கு வங்கு அதிகரித்ததன் காரணமாக கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தொடர்ந்து தேர்தல் பரபரப்பிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற அரசியல் உத்தியா அல்லது அரசின் மீதான மக்கள் அதிருப்தியைத் திசைதிருப்பும் முயற்சியா என்ற கேள்விகள் எழுகின்றன. எதார்த்தமான சூழலைப் புரிந்துகொள்ளாமல், எதை மனதில் வைத்துக்கொண்டு ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பது பெரும் புதிராக உள்ளது.

குழப்பத்தில் தொண்டர்கள் – உண்மை எது?

ஒருபுறம், தேர்தல் ஆணையம் பணிகள் காரணமாக இடைத்தேர்தல் தாமதமாகும் என்கிறது; மறுபுறம், நீதிமன்றத் தீர்ப்பு வராமல் தேர்தல் சாத்தியமே இல்லை என்ற நிலை நீடிக்கிறது. ஆனால், திமுக தலைவர் இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம், இன்றே தயாராகுங்கள்” என்று தொண்டர்களைக் களமிறங்கச் சொல்கிறார். இதில் எது உண்மை, யாரை நம்புவது என்ற பெரும் குழப்பம் திமுக தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. சட்ட நடைமுறைகளையும் தேர்தல் ஆணையத்தின் எதார்த்த விதிகளையும் கவனத்தில் கொள்ளாமல், கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்காக மட்டுமே மு.க.ஸ்டாலின் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா என்ற விமர்சனம் வலுத்து வருகிறது. எதுவாக இருந்தாலும், களநிலவரத்திற்கு முற்றிலும் முரணான இந்த கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் தேவையற்ற சலசலப்பையே உருவாக்கியுள்ளன.

Source link