தமிழகத்தில் திருச்சி கிழக்கு,கரூர்,விராலிமலை,அம்பாசமுத்திரம்,பெருந்துறை உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களின் உதேசப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 5 தொகுதி இடைத்தேர்தலுக்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அறிவாலயத்தில் நடந்த இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தான் இந்த வேட்பாளர் பட்டியல் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எளிதில் வெற்றி பெறக்கூடிய வலுவான வேட்பாளர்கள் களமிறக்கப்பட உள்ளனர்.
திமுக தரப்பில் பேசப்படும் உத்தேச பட்டியல்
திருச்சி கிழக்கு தொகுதியில் அன்பில் மகேஷ் கரூர் தொகுதியில் அசோக்குமார் விராலிமலை தொகுதியில் எம்.எம்.அப்துல்லா அம்பாசமுத்திரம் தொகுதியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் இவர்கள் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி உறுதி என கழக நிர்வாகிகள் கருதுகின்றனர். ஆனால் திமுகவில் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இவர்கள் தான் வேட்பாளர்கள் என்ற பேச்சு அறிவாலயம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அன்பில் மகேஷ் மீதான வழக்குகள்
அன்பில் மகேஷ் மீதான வழக்குகள்
ஒருவேலை இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கில் அன்பில் மகேஷ் போட்டியிட்டால் திமுகவுக்கு பலவினமாக அமையும். காரணம் திருச்சி கிழக்குத் தொகுதியில் அன்பில் மகேஷ் போட்டியிடுகிறார். இவர் மீது பள்ளிக்கு அங்கீகாரம் வழங்க 1000 கோடிக்கு மேல் ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டு மற்றும் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதுடன், அத்தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வரக்கூடும்.
ரவீந்திரநாத் மீதான வழக்குகள்
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. ஏற்கனவே இவரது வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் பழைய வழக்குகள் மற்றும் ஈடி (ED) வழக்குகள் தூசி தட்டப்பட்டு சட்டச் சிக்கல்கள் தீவிரமடையலாம்.
தவெக தரப்பு – ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் சீட்
அதே போல தமிழக வெற்றிக் கழக தரப்பிலும் ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு தான் மீண்டும் சீட் உறுதி என கூறப்படுகிறது. ராஜினாமா செய்த அந்த முன்னாள் எம்எல்ஏக்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். எனவே தவெகவில் வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்.குறிப்பாக அதிமுக சார்பில் போட்டியிட்ட கரூர் மற்றும் விராலிமலையில் விஜயபாஸ்கர்கள் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக தரப்பு என்ன?
அதிமுக மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. . ஆனால் வழக்கம் போல இந்த தேர்தலில் நிற்பதற்கு பதிலாக ஒதுங்கிக் கொண்டால், தப்பித்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சட்டசபை தேர்தலில் ஐந்து தொகுதிகளில் திருச்சி கிழக்கு தவிர மற்ற நான்கு தொகுதிகளிலும் ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்றதால், இம்முறை போட்டியிடாமல் ஒதுங்க வாய்ப்பில்லை. அவ்வாறு ஒதுங்கினால் கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் குரல்கள் அதிகரித்து உட்கட்சிப் பூசல் தீவிரமடையும். மதுராந்தகம், தாராபுரம் போன்ற தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்ததால், குழப்பமான சூழலைத் தவிர்க்க இந்த ஐந்து தொகுதிகளில் பாதியைத் தன்வசம் வைத்துக்கொண்டு, மீதித் தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க அதிமுக பரிசீலித்து வருகிறது அம்பாசமுத்திரம் தொகுதியை பாஜகவின் நயினார் நாகேந்திரனுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளது. மேலும், எல். முருகன் தமிழக அரசியலுக்கு வந்து கட்சியைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால், பாஜக இத்தொகுதியில் வெற்றி பெறத் தீவிரமாகச் செயல்படும்.
கள நிலவரம் என்ன?
திமுகவில் இந்த உத்தேச வேட்பாளர்கள் போட்டியிட்டால் நிச்சயம் ஐந்து தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்க முடியும். அவர்களும் அவ்வளவு எளிதாக இந்த களத்தில் ஜெயிப்பது கடினம் தான். சரியான தேர்வு தான் என அரசியல் வட்டாரம் கருதுகிறது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இன்றைய ஆலோசனைக்கு பிறகு, 5 தொகுதி போர் களம் இன்னும் சூடுபிடித்துள்ளது. ரெடியாக உள்ள தவெக வேட்பாளர்கள் அந்தந்த தொகுதி முழுவதும் தற்போது பிரச்சாரம் செய்யாத குறையாக நலத்திட்ட உதவிகள் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த சூழலில் தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் முறையான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Source link
