5ஆம் பாவம் என்றால் என்ன?
5ஆம் பாவம் ஒரு நிலையற்ற பாவமாகும்.அதாவது கொடுப்பினை இல்லை என்றாலும் தசா புத்தி வழியாக இந்த பாவ காரகங்களைப் பெறமுடியும் என்பது இதன் பொருள்.5ஆம் பாவத்தின் காரக கிரகங்களாவன., குழந்தை,விந்து எண்ணிக்கை, சினை முட்டை உற்பத்தி போன்றவற்றிற்குகுருவும், மற்றும் காதல், கலை, ரசனை, அழகு இவற்றிற்கு காரணமான சுக்கிரனும் காரக கிரகங்களாகும். 5ஆம் பாவம் என்பது லக்னத்திற்கு மிகவும் சாதகமான திரிகோண பாவம் என்பதால், லக்னத்திற்கு சுகம் தரும், உடல் உழைப்பற்ற காரகங்களை தன்னுள் கொண்டுள்ளது. லக்னம் (ஜாதகர்) நிகழ்காலம், 5ஆம் பாவம் குழந்தை எதிர்காலம்.
5ஆம் பாவம் விளக்கம்
——————-
5ஆம் பாவம் என்பது லக்னத்தின் திரிகோண பாவமாகும். திரிகோண பாவங்கள் ஒன்றை விட ஒன்று வலிமையானது என்பதால் லக்னத்தை அதன் தனித்தன்மையை மெருகேற்றும், ஜாதரால் மட்டுமே செய்ய முடிந்த இயற்கை அறிவை கொண்டுள்ளது. “ருண ரோக சத்ரு” என்ற 6ஆம் பாவத்தின், அனைத்து காரகங்களுக்கும் எதிரான காரகங்களைப் 5ஆம் பாவம் பெற்றுள்ளது. 5ஆம் பாவம் என்பது, ஒருவருக்கு நோய் வந்தபின் உடம்பின் உள்ளேச் சென்று, நோய்க் கிருமிகளை அழிக்கப் பயன்படுத்தும் அடுத்தக்கட்ட அறிவு அதாவது பின் யோசனை ஆகும்.
காரகங்கள்
இயற்கை, ரசனை, அழகு, கலை, இசை, மென்மையான உணர்வுகள், இன்ப உணர்வுகள், நகைச்சுவை உணர்வுகள், மகிழ்ச்சி, கவிதை, விளையாட்டு, அரசியல், அன்பு, பாசம், கவர்ச்சி, காதல், குழந்தை உருவாக்கும் திறன்,விந்து உற்பத்தி, ஹார்மோன்கள், கருமுட்டை உற்பத்தி போன்ற அகத்தை மகிழ்விக்கும் காரகங்கள் இதில் உள்ளன. பொறுப்புணர்ச்சியற்ற, உழைக்காமல் (உடல் உழைப்பற்ற) பொருளாதாரத்தை பெறுவது (கமிஷன்). அழகுப் படுத்திக்கொள்வது, குழந்தைத்தனம், இளமை ஆகியவையும் இதன் காரகங்கள் ஆகும்.
5ஆம் பாவம் உறுப்புகள்
இதயம்,முதுகுத்தண்டு, எல்லாவித ஹார்மோன்கள், பாலின ஹார்மோன்கள், வெள்ளை அணுக்கள், உடலின் புரதச்சத்துக்கள் போன்றவை 5ஆம் பாவத்தின் உறுப்புகள் ஆகும்.
5ஆம் பாவம் தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் வாயிலாக 1,3,7,11 பாவங்களைத் தொடர்பு பெற்றால்.,
ஹார்மோன் உற்பத்தி,உடலின் செல்களின் வளர்ச்சி, கொழுப்பை கரைத்தல் ஆகியவற்றிற்கு காரணமான நிணநீர்உற்பத்தி,
ஆகியவை சிறப்பாக இருக்கும். இவை அகக்காரகங்களை சிறப்பாக வளர்த்தும், அதே சமயம் புறக்காரகங்களை முற்றிலும் தடுக்காமலும் உள்ள பாவங்கள் ஆகும். 2ஆம் பாவத்திற்கு 3,7,11ம் பாவங்கள் 8,12 பாவங்களாக வரவில்லை. லக்னத்தையும் கெடுக்காது என்பதால், இவை பொருளாதாரத்திற்கும் மிதமான பாவங்கள் ஆகும். 5ஆம் பாவம் 5,9 என்றபாவத்தொடர்புகளைப் பெற்றால் என்னென்ன பலன் கிடைக்கும் பார்ப்போம்.
5ஆம் பாவம் 8,12 என்ற பாவத் தொடர்புகளைப் பெற்றால்,
5ஆம் பாவம் 8,12 என்ற பாவத் தொடர்புகளைப் பெற்றால்,
இவை லக்னத்திற்கு மிகவும் மோசமான பாவங்கள் என்பதால், 5 ஆம் பாவ காரகங்கள், அந்த பாவ உறுப்புகளின் மூலமாகவும், அதன் தொழில்கள் மூலமாகவும் ஜாதகர் வலி, வேதனைகளை அனுபவிப்பார்.
8ஆம் பாவத் தொடர்புபெறும்போது, அந்த குறிப்பிட்ட பாவ உறுப்புகளில் மாற்றம், உறுப்புகளின் செயல்பாடுகளில் மாற்றம், தொழிலில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
இரட்டைப்படைப்பாவங்கள்
இரட்டைப்படைப்பாவங்கள் தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் வாயிலாக 2,4,6,10 பாவங்களைத் தொடர்பு கொள்வதை விட, ஒற்றைப்படை பாவங்கள் 2,4,6,10 பாவங்களைத் தொடர்பு கொள்வது மிகவும் உன்னதமான உயர்ந்த நிலையை கொடுக்கும் (Unlimited Power).
அதாவது அவர்களின் அறிவித்திறமையை யாராலும் கணிக்க முடியாத நிலையில் இருக்கும்.
5ஆம் பாவம் தனியே 4ஆம் பாவத் தொடர்பு பெற்றால் , மலட்டுத் தன்மை, ரசனை குறைபாடு ஏற்படும். கற்பு உடையவர் எனவும், உடல் சார்ந்த ஒழுக்கம் உடையவர் எனவும் சொல்லலாம் காரணம் பாலியல் ஹார்மோன்களின் குறைவாகவே இருக்கும்.
5ஆம் பாவத்தின் அகக் காரகங்களை
5ஆம் பாவத்தின் அகக் காரகங்களை, அதாவது 5ஆம் பாவ உறுப்புகளை சிறப்பாகச் செயல்பட வைக்கும். அதே சமயத்தில் 2,6,10 என்ற பொருட்பற்றான பாவத்திற்கு 5,9ஆம் பாவங்கள் 4,8,12ம் பாவங்களாக வருவதால், அவை பொருளாதாரத்திற்குச் சிறப்பில்லை. ஆனால் இயற்கை அறிவால், அதன் நுண்ணியத்தன்மையால் இவர்கள் மீது, மற்றவர்களுக்கு ஓர் ஈர்ப்பு இருக்கும். காதல் உணர்ச்சிகள் அதிகம் இருக்கும். தங்களது மகிழ்ச்சிக்காகவும்,குழந்தைகளுக்காகவும் மிகவும் ஆடம்பர செலவு செய்வார்கள்.
5ஆம் பாவம் 2,4,6,10 என்ற பாவத் தொடர்புகளைப் பெற்றால்.,
இந்த பாவங்கள் இயற்கை, தனித்தன்மை கொண்ட பாவமான 5ஆம் பாவத்திற்குச் சிறப்பான புற வாழ்க்கையத் தரும் பாவத் தொடர்புகள் ஆகும்.இந்தத் தொடர்புகளைப் பெற்றால் அந்த குறிப்பிட்டத் துறையில் சாதனைகளைப் படைப்பார்கள். 4ஆம் பாவம் 5ஆம் பாவத்திற்கு 12ஆம் பாவம் என்றாலும், லக்னத்திற்கு 30% நன்மை என்பதால், இயற்கை அறிவு மூலமாக மாறாத, கோட்பாடுகளை உருவாக்குவார்கள்.
அதற்கு உதாரணமாக ஜோதிடத்தில், விளையாட்டு துறையில், சினிமா மற்றும் அரசியல் துறைகளில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதோடு எதிர்காலத்தில் பிறருக்கு ஒரு படிப்பினையை உருவாக்கு வார்கள்.
உடல் நல பிரச்னைகள்
12ஆம் பாவம் என்பது குறிப்பிட்ட பாவச் செயலை மேலே தொடர விடாமல் உடனே துண்டிப்பது, உறுப்புகளைச் செயல் இழக்கச் செய்வது போன்ற பிரச்சனைகளைக் கொடுக்கும். உதாரணமாக குழந்தைகள் மூலம் பிரச்சனை, ஹார்மோன்கள் குறைபாடு, முதுகெலும்பு பிரச்சனை, காதல் தோல்வி, இருதய கோளாறு ஏற்படும். தாம்பத்திய வாழ்க்கையில் நிறைய இரகசியம், மற்றும் அந்தரங்கம் தொடர்பானப் பிரச்சனையும் ஏற்படும். 5ஆம் பாவம் 8ஆம் பாவத்தை தொடர்பு கொண்டால் குழந்தையின்மை, இழப்பு , அவர்கள் மூலமாக பிரச்சனை, மற்றும் காதல் தோல்வி மூலமாக “சித்த பிரமை” போன்றவையும் ஏற்படும்.
