6 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை? சபாநாயகரை சந்தித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் – action against six former aiadmk mlas agri krishnamoorthy and thalavai sundaram meet speaker

அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தமிழ்நாடு வெற்றி கழகத்தில் இணைந்த 6 முன்னாள் எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் அதிமுக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சபாநாயகருக்கு விளக்கக் கடிதம் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் , நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்ததாக தெரிவித்தனர்.

அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாடு வெற்றி கழகத்தில் (டிவிகே) இணைந்த 6 முன்னாள் எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து விளக்கக் கடிதம் வழங்கினர்.

சபாநாயகரிடம் விளக்கம் அளித்த அதிமுக

6 முன்னாள் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை கோரி அதிமுக ஏற்கனவே சபாநாயகரிடம் மனு அளித்திருந்தது. அதன்பேரில் சில விளக்கங்கள் கேட்டு சபாநாயகர் அலுவலகம் கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் நேரில் சந்தித்து விளக்கங்களை அளித்தனர்.

‘மக்களுக்கும் அதிமுகவுக்கும் துரோகம் செய்துள்ளனர்’

செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்கள் கட்சிக்கும், தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

அவர்கள் குதிரை பேரத்தின் மூலம் தமிழ்நாடுவெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாகவும்,கட்சி தாவல்தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

‘இது பங்காளி சண்டைதான்’

தளவாய் சுந்தரம் பேசுகையில், எம்எல்ஏக்கள் ஏன் ராஜினாமா செய்தார்கள் என்பதை அவர்கள் தெளிவாக விளக்கவில்லை என்றார். தேர்தலில் போட்டியிடும்போது அதிமுக மீது அதிருப்தி இல்லாதவர்கள், தற்போது ஏன் கட்சியை விட்டு சென்றனர் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு அளித்த நிலையில், அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் டிவிகேவில் இணைந்ததாக விமர்சித்தார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு காட்டமான பதில் கொடுத்த உதயகுமார்

அதேநேரத்தில், “எல்லா கட்சிகளிலும் கருத்து வேறுபாடுகளும் மனக்கசப்புகளும் இருக்கும். தற்போது நடப்பது பங்காளி சண்டைதான். கட்சியை விட்டு சென்றவர்கள் திரும்ப வருவதும், வராமல் இருப்பதும் அவர்களது விருப்பம்” என்றும் அவர் கூறினார்.

‘நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி’

சி.விஜயபாஸ்கர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்ததளவாய் சுந்தரம், அவர் அதிமுகவில் அமைச்சராக இருந்தவர் என்பதால் அவர் மீது ஊழல் பட்டியல் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

மேலும், சட்ட விதிகளின்படி சபாநாயகர் செயல்படுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், மன்னிப்பு கடிதம் அளித்த பிறகும் ராஜினாமா செய்த இரண்டு எம்எல்ஏக்கள் உட்பட 6 பேரின் விவகாரத்தில் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Source link