சென்னை:
வரும் சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக
அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். மார்ச் 29ம் தேதி
வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும்
23ம் தேதி நடக்கும் சட்டசபை தேர்தலையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும்
கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் என அடுத்தடுத்த பணிகளில்
ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம்
கட்சியும் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி
வந்தது. அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தனித்துப் போட்டியிடுவதாக கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
கட்சி
வலுவாக உள்ள 120 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள 60 முதல் 70
தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அத்தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியலை 29ம் தேதி சென்னையில் வெளியிடப்பட உள்ளது.
