69 இனங்கள்; 21,091 பறவைகள்… பாசனக் குளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வலசை பறவைகள்!

“திருநெல்வேலி பாசனக் குளங்களே வலசை பறவைகளுக்கான மிக முக்கியமான வாழ்விடம்” என்பதை விளக்குகிறார் தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன்.

வலசைப் பறவைகள்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரியினை வாழ்வாக்கிய பறவை, வலசை. பறவைகள் பல காரணங்களுக்காகப் பயணத்தை மேற்கொள்கின்றன.

பறவைகள் வெப்பமான பகுதிக்கு நகரவும், உணவுக்காகவும், வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிக்கவும் வலசை செல்கின்றன. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை நோக்கிப் பறவைகள் வலசை வருகின்றன.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் சுமார் 100 வகையான பறவைகள் இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்டவை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து குளிர்காலத்தில் வலசை வரும் பறவைகள் ஆகும்.

69 இனங்கள்; 21,091 பறவைகள்... பாசனக் குளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வலசை பறவைகள்!

சமீபத்தில் நெல்லையில் தாமிரபரணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலசை பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்பில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 68 பாசன குளங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இவை பறவை நிபுணர்களின் வழிகாட்டுதல்களுடன், எட்டு குழுக்களாக 250-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களோடு நடத்தப்பட்டது.

இந்த தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வினைச் சிறப்பாக நடத்திய அதன் ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணனிடம் பேசினோம்.

” 68 பாசனக் குளங்களில் 69 இனங்களைச் சேர்த்து மொத்தம் 21,091 வலசை பறவைகள் பதிவாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பக்குளம் பகுதியில் அதிகபட்சமாக 45 இனங்களைச் சேர்ந்த 2, 292 பறவைகள் பதிவாகியுள்ளது.

69 இனங்கள்; 21,091 பறவைகள்... பாசனக் குளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வலசை பறவைகள்!

இதனைத் தொடர்ந்து வெள்ளூர் கஸ்பா (1,804 பறவைகள் – 39 இனங்கள்), பெருங்குளம் (1,531 பறவைகள் – 39 இனங்கள்), திருநெல்வேலி மாவட்டத்தின் கங்கை கொண்டான் (1,232 பறவைகள் – 32 இனங்கள்) மற்றும் மேல்புதுக்குடி சுனை (1,217 பறவைகள் – 35 இனங்கள்) ஆகிய பகுதிகள் முக்கியமானவையாக இருந்தன.

சிறுநீர்க்காகம் (2,579), நாமக் கோழி (2,155), பழசைப் பறவையான மீசை ஆலா (1,148), சின்ன ஆன்றில் (1,107), நீளவால் இலைக் கோழி (1,095) மற்றும் வலசை பறவையான தகைவிலான் (1,093) அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.

birds
birds

பதிவானவ பறவைகளில் 36 சதவிகிதம் வலசைப் பறவைகள் தான். இவை வடக்கு ஐரோப்பாவின் இனப்பெருக்க பகுதிகளை இந்தியா உட்பட தென்னாசியாவின் குளிர்கால ஈர நிலங்களுடன் இணைக்கும் மத்திய ஆசிய பறவை பரப்பு பாதையை (Central Asian Flyway) பயன்படுத்துகின்றன.

69 இனங்கள்; 21,091 பறவைகள்... பாசனக் குளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வலசை பறவைகள்!
SANKAR S

தாமிரபரணி பாசனக் குளங்களே வலசை பறவைகளுக்கான மிக முக்கியமான வாழ்விடம். 2026 கணக்கெடுப்பில் மொத்தம் 8,912 வலசை பறவைகள் பதிவாகியுள்ளது. இதில் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமான (Near Threatened) கருவால் மூக்கன், வரித்தலை வாத்து, ஊசிவால் வாத்து, நீலச்சிறகு வாத்து, நாமத்தலை வாத்து போன்ற வலசை வாத்தினங்களும் அடங்கும்.

69 இனங்கள்; 21,091 பறவைகள்... பாசனக் குளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வலசை பறவைகள்!
SANKAR S

திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கு கழுவூர், கங்கை கொண்டான், மானூர், மாறாந்தை மற்றும் தென்காசி மாவட்டத்தின் வாகைக்குளம் ஆகிய பாசனக் குளங்களில் கூளக்கடா, கருந்தலை அன்றில், சின்ன அன்றில், பாம்புத் தாரரா, இந்திய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், நத்தைக்குத்தி நாரை போன்ற இனங்கள் இனப்பெருக்க நிலையில் காணப்பட்டன. இதன் மூலம், கூந்தன்குளம் போன்ற பாதுகாக்கப்பட்ட பறவைக் காப்பகங்களைத் தாண்டியும் பாசனக் குளங்கள் இனப்பெருக்கத்திற்கு மிக முக்கியமானவை என்பது தெளிவாகிறது.

உள்நாட்டு மற்றும் வலசை பறவைகளுக்கு பெரிய பாசனக் குளங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவாகியுள்ள 51 % பறவைகள் மற்றும் இனப் பல்வகைமையில் 80 சதவிகிதத்தையும் கொண்டு அறியலாம்.

birds
birds
SANKAR S

திடக் கழிவுகள் கொட்டுதல், குளக்கரைகளில் மது அருந்துதல், அயல் தாவர மற்றும் மீன் இனங்களின் ஆக்கிரமிப்பு, நகர்ப்புற குளங்களில் கழிவுநீர் கலப்பு போன்ற பல்வேறு அச்சுறுத்தல்கள் முக்கியமான வாழ்விடங்களைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன. இவை நீர்ப்பறவைகளின் வாழ்விடங்களுக்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துவதால், ஒருங்கிணைந்த மேலாண்மை நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

அது மட்டுமன்றி பாசனக் குளங்கள் அழிவடைந்தாலோ, தரம் குறைந்தாலோ, சர்வதேச வலசைப் பறவைகள் வருகின்ற பாதைகள் பாதிக்கப்படும். எனவே நீர்ப் பறவைகளின் நீண்ட காலப் பாதுகாப்பிற்கு பாசனக் குளங்களின் பாதுகாப்பு, மீளுருவாக்கம் மற்றும் நிலைத்த மேலாண்மை மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமானது ஆகும்” என்று விளக்கினார்.

Source link