7 லட்சம் வீடு கட்டித்தருவோம்; 14 அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 2030ம் ஆண்டுக்குள் 7 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் உள்ளிட்ட 14 முக்கிய அறிவிப்புகளை சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்த உள்ள திட்டங்கள் பற்றிய அவரது அறிவிப்புகள் பின்வருமாறு:

1. 2030ம் ஆண்டுக்குள் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் 5 லட்சம், நகர்ப்புறங்களில் 2 லட்சம் என மொத்தம் 7 லட்சம் வீடுகள் கட்டித்தப்படும்.

2. மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் நோய்களை கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும்.

3. மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆயிரம் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும். 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உணவுப்பொருள் உற்பத்தி உயர்த்தப்படும்.

4. அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100 சதவீதம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். 300க்கும் மேற்பட்ட நூலகங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் விளையாட்டு, வாழ்க்கை திறன் கல்வியை உறுதிப்படுத்துவோம்.

மேலும் அறிவிப்புகள் விரைவில் அப்டேட் செய்யப்படும்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Source link