சென்னை: விடியல் பயணம் புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து எனவும், திராவிட மாடலில் 7,712 விடியல் பேருந்துகள் மூலம் மொத்தம் 897.82 கோடி விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘விடியல் பயணம் புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து. திராவிட மாடலில் 7,712 விடியல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மார்ச் 1 வரையில், 2021-22 – 95.86 கோடி, 2022-23 – 166.53 கோடி, 2023-24 – 186.35 கோடி, 2024-25 – 213.94 கோடி, 2025-26 – 235.14 கோடி என மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள விடியல் பயணங்கள் – 897.82 கோடி.
