சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக, கரூர், வேலுார் ஆகிய இடங்களில், 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, ஈரோடில், 103 டிகிரி பாரன்ஹீட், வெப்பம் பதிவானது.
சென்னை மீனம்பாக்கம், தர்மபுரி, மதுரை, நாமக்கல், திருப்பத்துார், திருச்சி நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
