2020-ம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்கர் வரலாற்றில் கொரியன் திரைப்படங்கள் முத்திரைகளைப் பதிக்கத் தொடங்கினாலும், இசையைப் பொறுத்தமட்டில் வெஸ்டர்ன் வகைக்கே ஆஸ்கர் முக்கியத்துவம் கொடுத்து வந்தது.
ஆனால், ‘கே-பாப் டிமான் ஹன்டர்ஸ்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்டு பலராலும் பாராட்டப்பட்டது.
இதன் மூலம் ஆஸ்கர் நடுவர்கள் புறக்கணித்துவிட முடியாத இடத்தையும் இத்திரைப்படம் பெற்று, இப்போது விருதையும் தட்டிச் சென்றிருக்கிறது.

சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்ற பிறகு இப்பாடலை எழுதியவர், பாடியவர் என இப்பாடலுக்காக வேலை பார்த்த அனைவரும் மேடையேறினார்கள்.
இந்தப் பாடலின் இணை பாடலாசிரியர் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஆர்கெஸ்ட்ரா ஒலியை ஒலிக்கச் செய்திருக்கிறது. மேடையிலிருந்து மின் விளக்குகளும் சரியாக வேலை செய்யாதபடி செய்திருக்கிறார்கள். இப்படியான சில சலசலப்புகள் இவர்கள் பேசும்போது நடந்திருக்கிறது.
“மற்றவர்கள் பேசுவதற்கு அதிக அளவில் நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வரலாற்று தருணத்தில் ‘கோல்டன்’ பாடல் குழுவிற்கு பேசுவதற்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை” என கே-பாப் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
