“99.9% நிர்வாகிகளுக்கு திமுக கூட்டணியில் உடன்பாடில்லை”- கதறும் மதிமுக | MDMK Cadre dissatisfaction over DMK alliance and Vaiko silence

“சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம். இதுதான் எங்கள் நிலைமை. திமுக எங்களுடைய தரத்திற்கு தகுந்த மாதிரி எண்ணிக்கை கொடுக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது.

அதேபோல நான்கு தொகுதிகளிலும் எங்கள் சின்னத்தில் போட்டியிட முடியவில்லை என்ற வருத்தமும் இருக்கிறது” என்று மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் நேற்று (மார்ச்.27) அண்ணா அறிவாலயத்தில் மதிமுக-வுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பின் குமுறினார்.

இது அர்ஜுனராஜின் குமுறல் மட்டும் அல்ல பெரும்பாலான மதிமுக நிர்வாகிகளின் கதறல் சத்தமும் கூட..!

அர்ஜுனராஜ்- மதிமுக அவைத்தலைவர்

அர்ஜுனராஜ்- மதிமுக அவைத்தலைவர்

கதறும் மதிமுக நிர்வாகிகள்

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக-வுக்கு 10 என தாராளம் காட்டப்பட்ட நிலையில், ம.தி.மு.க-வுக்குக் கிடைத்தது வெறும் 4 இடங்கள் மட்டுமே. இதில் உச்சக்கட்ட வேதனை என்னவென்றால், அந்த நான்கில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்கிற “கட்டாய’ நிபந்தனைத் தான்.

எஸ்டிபிஐ போன்ற சிறிய கட்சிகளின் வரிசையில் வைத்து ம.தி.மு.க-வும் கையாளப்படுவது அக்கட்சியின் நிர்வாகிகளைச் செரிக்க முடியாத துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Source link