பாகிஸ்தான் புறக்கணிப்பு: இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை போட்டியை

லாகூர்: ‘டி-20’ உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்தியா, இலங்கையில், ‘டி-20’ உலக கோப்பை 10வது சீசன் (பிப். 7 – மார்ச் 8) நடக்கவுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்னை காரணமாக இத்தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வர மறுத்ததால், பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் இலங்கையின் கொழும்புவில் நடக்கவுள்ளன. இதன்படி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் பிப். 15ல் கொழும்புவில் நடக்கவுள்ளது.

சமீபத்தில், பாதுகாப்பு காரணமாக இந்தியாவுக்கு வர வங்கதேச அணி மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து உலக கோப்பை தொடரில் இருந்து வங்கதேச அணி நீக்கப்பட்டு, ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. வங்கதேச அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இத்தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று, இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசு சார்பில் சமூகவலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘பாகிஸ்தான் அணி ‘டி-20′ உலக கோப்பையில் விளையாட அனுமதி அளித்துள்ளோம். ஆனால், பிப். 15ல் நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாடாது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link