ஆமதாபாத்: ஆமதாபாத்தில் நடக்கும் டி-20 உலக கோப்பை லீக் சுற்றில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் நடக்கும் டி-20 உலக கோப்பை லீக் சுற்றில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கும் முக்கியத்துவம் இல்லாத லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து மோதுகின்றன. இந்தியா ஏற்கனவே ‘சூப்பர்-8’ சுற்றுக்கு முன்னேறிவிட்டது. நெதர்லாந்து வெளியேறிவிட்டது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்திய அணி விவரம்

அபிசேக் சர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா,ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், பும்ரா, வரூண் சக்கரவர்த்தி

முந்தைய வரலாறு

ஆமதாபாத், மோடி மைதான ஆடுகளத்தில் எளிதாக ரன் குவிக்கலாம்.* ‘டி-20’ அரங்கில் இரு அணிகளும் ஒரு முறை மோதின. சிட்னியில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை போட்டியில் (2022) இந்திய அணி (179/2), நெதர்லாந்தை (123/9) வீழ்த்தியது.* ஆமதாபாத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை.

Source link