சோபியா: பல்கேரியாவில் அடுத்த பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19 தேதியன்று நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கேரியா நாட்டில் பிரதமர் பதவியில் இருந்த ரோசன் ஜெல்யாஸ்கோவ் தலைமையிலான சிறுபான்மை அரசு, ஊழல் புகார்கள், பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களால் கடந்த 2025 டிசம்பரில் ராஜினாமா செய்தது.
2021-ம் ஆண்டு முதல் பல்கேரியாவில் எந்த ஒரு கட்சியும் நிலையான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. தொடர்ச்சியான தேர்தல்கள் காரணமாக மக்களின் ஓட்டு அளிக்கும் ஆர்வம் குறைந்து காணப்படுகிறது.
பல்கேரியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், அடுத்த பொதுத்தேர்தல் 2026 ஏப்ரல் 19 அன்று நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேர்தலை நடத்துவதற்காக, பல்கேரிய இடைக்காலப் பிரதமராக அந்நாட்டு தேசிய வங்கியின் துணை ஆளுநரான ஆண்ட்ரி கியுரோவ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட உள்ளது.
பல்கேரிய அதிபர் இலியானா யோடோவா (பிப்ரவரி 18) இன்று ஒரு இடைக்கால அரசை நியமித்து, வரும் ஏப்ரல் 19, அன்று முன்கூட்டிய பார்லிமென்ட் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்கேரியாவில் நடைபெறும் 8 வது தேர்தல் இதுவாகும்.இது பல்கேரியாவில் தொடர்ச்சியான அரசியல் ஸ்திரமற்ற தன்மையைக் காட்டுகிறது.
