முட்டாள் என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! – முரண்பாடும் விளக்கமும்

அறிவாளி மற்றும் புத்திசாலி என ஒருவரை கூறுவதில் சிறிய முரண்பாடுகள் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மனிதன் என்பவன் இயற்கையாக படைக்கப்பட்டவன்..

சித்தரிப்புப் படம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அறிவு கெட்டவனே… முட்டாள் என்று பெற்றோரிடம் அர்ச்சனை வாங்காமல் வளர்ந்திருப்பவர்கள் மிகவும் அரிதாகவே இருப்பர். ஏனெனில் அறிவு இருப்பர்கள் தான் நன்றாக படித்த அறிவாளிகளாகவும் மற்றும் புத்திசாலிகளாகவும் வலம் வர முடிகிறது என்று இன்றளவும் ஆணித்தரமாக கூறப்படுகிறது.

அறிவாளி மற்றும் புத்திசாலி என ஒருவரை கூறுவதில் சிறிய முரண்பாடுகள் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மனிதன் என்பவன் இயற்கையாக படைக்கப்பட்டவன். இந்த இயற்கை மனிதனுக்கு ஏற்றத்தாழ்வின்றி உடல் உறுப்புகளைக் கொடுத்துள்ளது. அதில் அறிவுக்கு ஆதாரமாக விளங்கக் கூடியது மூளை மிக முக்கியமான ஒன்று. இதனைக் கருத்தில் கொள்ளும் போது அறிவு என்பது அனைவருக்கும் ஒன்றே! பொதுவானதே! இதன் அடிப்படையில் யாரையும் முட்டாள், அறிவு கெட்டவன் என்று கூறுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.

முட்டாள் என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - முரண்பாடும் விளக்கமும்

எதன் அடிப்படையில் இத்தகைய பிரிவினை வருகிறது என்று வாழ்வில் சாதனை புரிந்த மனிதர்களின் செயல்பாடுகளை உள்வாங்கும் போது கிடைத்த விடைதான் “நினைவாற்றல்”.

நினைவாற்றல் என்பது மூளைக்கும் ஐம்புலன்களுக்கும் இடையேயான தகவல்கள் பரிமாற்றம் ஆகும். இவ்வாறு தகவல் பரிமாற்றம் நடைபெறும் போது ஆறாவது அறிவு (மனதின்) உதவியுடன் ஏன்? எதற்கு? எப்படி? என பல்வேறு வினாக்களுடன் சிந்தனை தூண்டப்படுகிறது. அதன் காரணமாக மாதா, பிதா, குரு, புத்தகம் மூலமாக கிடைக்கப்பெறும் விடைகள்  மூளையில் சேமித்து “முதிர்ச்சி” அடைய வைக்கிறது. இத்தகைய முதிர்ச்சியே “அனுபவம்” என்று அழைக்கப்படுகிறது.

முட்டாள் என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - முரண்பாடும் விளக்கமும்

இவ்வாறு எவன் ஒருவன் சிறு வயது முதல் மாதா, பிதா, குரு, புத்தகம் மூலமாக தன் சிந்தனையினை அதிகம் தூண்டும் செயலில் நேரம் தவறாது ஈடுபடுகிறானோ அவனுடைய நினைவாற்றல் படிப்படியாக உயர்ந்த நிலையினை அடைகிறது. 

இதன் மூலம் அறிவு கெட்டவன், அறிவு இல்லாதவன், முட்டாள் எனக் கூறுவதனை தவிர்த்து “நினைவாற்றல் இல்லாதவன்” எனக் கூற வலியுறுத்தப்படுகிறது. 

போட்டித் தோ்வுகளில் 90 சதவீதம் “நினைவாற்றல்” கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெருகிறார்கள் என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நேரம் தவறாது புத்தகத்தினை வாசித்து படிக்கும் போது சிந்தனை தூண்டப்பட்டு மூளை முதிர்ச்சி அடைவதாகும்.

“சிந்தனையால் முதிர்ச்சி அடைந்து அனுபவம் பெற்ற மனிதனாக மாறுகிறான்”

ஒரு தாவரம் தன் வேரினைக் ஆழமாகச் செலுத்தி எவ்வாறு தனக்கு தேவையான தாது பொருட்களை ஊறிஞ்சி தன்னுடைய மற்ற பாகங்களுக்கு உயிர்ப்பு கொடுக்கிறது. இது போல சிந்தனை என்னும் வேரினை ஆழமாகச் செலுத்தி பல்வேறு தகவல்களை ஊறிஞ்சி சிந்தனையின் பயனாக தன்னுடைய மூளையினை பலப்படுத்தினால் “நினைவாற்றல்” உயிர்ப்படைகிறது. சாதிக்கலாம்…

படித்தவன் – அறிவாளி

கற்றவன் – புத்திசாலி

அறிவாளி + புத்திசாலி = அனுபவசாலி (திறமைசாலி)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – **@*****an.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link