தஞ்சாவூர்: அரசியலுக்கு புதியதாக வந்தவர்கள் குறித்து நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் அவர் அளித்த பேட்டி: தேர்தல் ஆணையத்தை யாரோ இயக்குகிறார்கள். ம.தி.மு.க.,வுக்கு அங்கீகாரமே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். அதை முன்கூட்டியே உணர்ந்து தான், தனி சின்னத்தில் நான் போட்டியிடும் முடிவுக்கு வந்தேன். அதனால் தான், ம.தி.மு.க.,வை காப்பாற்ற முடிந்தது.
அதற்கு முழு காரணம் துரை வைகோ. தேர்தல் நேரத்தில் நான் யாருக்கெல்லாம் லட்சங்களை அள்ளிக் கொடுத்து உதவினேனோ, அவர்கள் தான் ம.தி.மு.க.,வை அழித்து விடலாம் என எண்ணி, என்னைப் பற்றி அவதுாறு பரப்பினார்கள். ம.தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
த.வெ.க., தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, ‘அரசியலுக்கு புதியதாக வந்தவர்கள் குறித்து நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை’ என்றார்.
