ஆமதாபாத்: நெதர்லாந்து அணிக்கெதிரான டி-20 உலகப்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா 17 ரன்னில் வெற்றி பெற்றது.இந்தியா,

ஆமதாபாத்: நெதர்லாந்து அணிக்கெதிரான டி-20 உலகப்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா 17 ரன்னில் வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த முக்கியத்துவம் இல்லாத லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து மோதின. இந்தியா ஏற்கனவே ‘சூப்பர்-8’ சுற்றுக்கு முன்னேறிவிட்டது. நெதர்லாந்து வெளியேறிவிட்டது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய் செய்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, துவக்க ஆட்டக்காரர்களான அபிஷே க் சர்மா, இஷான் கிஷன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் 3 பந்துகளை சந்தித்த அபிஷே க் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ஒரளவு தாக்குப்பிடித்த இஷான் கிஷன் 18 ரன்கள் சேர்த்த நிலையில் தட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 31 ரன்னிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 34 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர்.

ஷிவம் துபே அதிரடி அரை சதம்:

அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார். இறுதியில் வான் பீக் பந்தில் 66 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 30 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 6 ரன்களுடன் இருந்த நிலையில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன் எடுத்தது.நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளையும் ஆர்யன் தட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 194 ரன்கள் வெற்றி இலக்காகக்கொண்டு விளையாடிய நெதர்லாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் லெவிட், மேக்ஸ் ஓ டவுத் இருவரும் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்த்தனர். இதில் லெவிட் 24 ரன்களில் பாண்ட்யா பந்திலும், மேக்ஸ் ஓ டவுத் 20 ரன்களில் வருண் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த பேஸ் டி லீடி 33 ரன்களும் கோலின் ஆக்கர்மேன் 23 ரன்களும் சேர்த்து அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஆர்யன் தத் வருண் பந்தில் ரன் எடுக்காமல் வெளியேற ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 15 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா பந்தில் போல்ட் ஆனார். அடுத்து வந்த லயன் கேசெட், நோவா க்ரோஸ் அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.

இறுதியில் லயன் கேசெட், 26 ரன் எடுத்த நிலையில் துபே பந்தில் ஆட்டமிழந்தார். நோவா க்ரோஸ் ஆட்டமிழக்காமல் 25 ரன் எடுத்தார். லோகன் வான் பீக் 4 ரன் சேர்க்க 20 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து இந்திய அணி 17 ரன்னில் வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் வருண் 3 விக்கெட்டுகளையும் ஷிவம் துபே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணி லீக் ஆட்டத்தில் இத்துடன் 4 வது வெற்றியை பெற்றது.

Source link