மும்பை: மஹாராஷ்டிராவில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 5 சதவீத

மும்பை: மஹாராஷ்டிராவில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை பா.ஜ., அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., – தேசியவாத காங்., – சிவசேனா அடங்கிய, ‘மஹாயுதி’ கூட்டணி ஆட்சி நடக்கிறது.

கடந்த 2014ல் முதல்வர் பிரித்விராஜ் சவான் தலைமையிலான காங்., – தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடந்தபோது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மராத்தாக்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீடும், முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடும் வழங்கும் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பின், ஆட்சிக்கு வந்த பா.ஜ., – சிவசேனா கூட்டணி அரசு இதை சட்டமாக்கவில்லை. மேலும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை இந்த அவசர சட்டம் மீறுவதாகக் கூறி, மும்பை உயர் நீதிமன்றமும் இந்த அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டம் காலாவதியாகிவிட்டதாக மஹாராஷ்டிரா அரசு நேற்று தெரிவித்தது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு மற்றும் பகுதிநேர அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீடு அவசர சட்டம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சிறப்பு பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள முஸ்லிம்களுக்கு ஜாதி மற்றும் கிரீமிலேயர் அல்லாத சான்றிதழ்களை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link