சென்னை: எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமசந்திரன், 88, தொடங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் என்பது மக்களுக்கானது. தனி ஒருவருக்கானது அல்ல. எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குகிறேன். எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடாது. கட்சியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் குமார் இருப்பார்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர். சுயேட்சை சின்னத்தில் எங்கள் ஆதரவோடு போட்டியிடலாம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அத்தியாயம் முடிந்தது. ஓபிஎஸ் உடன் பழகியதற்காக வாழ்நாளை வீணாக்க முடியாது. இவ்வாறு பண்ருட்டி ராமசந்திரன் கூறினார்.
யார் இந்த பண்ருட்டி?
* பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர்., கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு பா.ம.க.,வில் சேர்ந்த அவர், அந்த கட்சி சார்பில் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.
* விஜயகாந்த் தனிக்கட்சி தொடங்கியதும், அந்த கட்சியில் சென்று சேர்ந்தார். பின்னர் அதில் இருந்தும் விலகி, அதிமுகவில் இணைந்தார்.
* அதிமுக பிளவுக்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார். இப்போது தனிக்கட்சியை தொடங்கியுள்ளார்.
* 1967 ல் முதல் முறையாக எம்எல்ஏ ஆன பண்ருட்டி இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, ஐநா சபையில் பேசுபவதற்கு எம்ஜிஆரால் அனுப்பி வைக்கப்பட்டவர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
புது கட்சி தொடக்கம் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். இது தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
