புதுடில்லி: வரும் ஏப்ரல் முதல் தொடங்கப்படவுள்ள சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்காக (எஸ்ஐஆர்) -தயாராக இருக்குமாறு 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தலைமை தேர்தல் கமிஷன் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை,பீஹார் மாநிலத்தில் ஏற்கனவே முடித்துவிட்டன.
தமிழகம், கேரளா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தற்போது இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அசாம் மாநிலத்தில் பிப்ரவரி 10, அன்று தனியாக ஒரு சிறப்புத் திருத்தப் பணி நிறைவு பெற்றது. இந்த நிலையில் அடுத்து 22 மாநிலங்கம், யூனியன் பிரதேசங்களில் சிறப்பு திருத்தப் பணி ஏப்ரலில் தொடங்க உள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் இன்று தெரிவித்துள்ளது.
சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளின் நோக்கம்,வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு நடத்தி, வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவுகள், இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் தகுதியற்றவர்களை நீக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும்.
இந்த ஏப்ரல் மாதக் கட்டத்தில் டில்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் நடைபெற உள்ளன.இதன் மூலம் இந்தியா முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் முழுமையடையும்.
2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகளோடு இது தொடர்பு இல்லாமல் இருக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் ஏப்ரல் மாதத் தொடக்கத்திற்கு முன்னதாகவே ஆரம்பகட்டப் பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
