‘டாடா இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனத்தின் பங்கு விலை நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 13 சதவீதம் வரை உயர்ந்து, 727 ரூபாய் என்ற அன்றைய உச்சத்தை தொட்டது. வர்த்தக முடிவில் 7.50 சதவீதம் விலை அதிகரித்து 692.30 என்கிற விலையில் முடிந்தது.
தற்போது தலைவராக இருக்கும் சந்திரசேகரனுக்கு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளது. அவரதுபதவிக்காலம் முடிய இன்னும் ஓராண்டு இருக்கும்போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது டாடா குழுமத்தின் எதிர்கால திட்டங்களில் ஒரு நிலையான தலைமை தொடரும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது.
‘டாடா இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனத்தில் 68.51 சதவீதம் பங்குகளை ‘டாடா சன்ஸ்’ வைத்துள்ளது. எனவே, டாடா சன்ஸ் எடுக்கும் ஒவ்வொரு முக்கிய முடிவும், அதன் அங்கமான ‘டாடா இன்வெஸ்ட்மென்ட்’ பங்குகளிலும் எதிரொலிக்கிறது.
