ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள உணவகத்துக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டின் போது சுவற்றில் மறைத்து

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள உணவகத்துக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டின் போது சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த தங்கம் மற்றும் 50 லட்ச ரூபாய் பணத்தை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்தனர்.

கடந்த 2008 ம் ஆண்டு நட்வர்லால் ஷர்தா என்பவர் கன்ஹா குரூப் என்ற உணவகத்தை துவக்கினார். உணவு, இனிப்பு மற்றும் பேக்கரி தயாரிப்புகள் விற்கப்பட்டன.இந்நிலையில், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சோதனை பல இடங்களில் நீடித்தது. அதில் 100 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதும், அதில் ஆடம்பர ஓட்டல்களில் முதலீடு செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.கன்ஹா நிறுவனத்திற்கு உரிமையாளருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடந்தது. முதல் இரண்டு நாட்கள் நடந்த சோதனையில் ஏதும் சிக்கவில்லை.

மூன்றாவது நாளில் நடந்த சோதனையின் போது ரகசிய சுவர் ஒன்று இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் அதில் சுவற்றில் தங்கம் மற்றும் பணம் இருந்ததை கண்டுபிடித்தனர். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தின் மதிப்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பணம் சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.மேலும், கன்ஹா நிறுவனத்துக்கு சொந்தமாக 10 வங்கி லாக்கர்கள் உள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதில், சொத்து ஆவணங்கள் மற்றும் தங்கம் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Source link