புதுடில்லி: ஈரானில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று மத்திய வெளியுறவு

புதுடில்லி: ஈரானில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறி உள்ளார்.

புதுடில்லியில் அவர் அளித்த பேட்டி;

ரஷ்யா மற்றும் வெனிசுலா எண்ணெய் விவகாரத்தில் அறிக்கைகள் மூலம் எங்களின் தெளிவான நிலைப்பாட்டை விளக்கி உள்ளோம். வணிக ரீதியாக சாத்தியமானதாக இருப்பின், வெனிசுலாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை ஆராய்ந்து வருகிறோம் என்று கூறி இருந்தோம். இந்த விஷயத்தில் எங்களின் நிலைப்பாடு இன்னமும் அப்படியேதான் உள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் இடையேயான உறவில் இந்தியா எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அதிலும் பாக். உடனான உண்மையான பிரச்னை என்ன என்பது உங்களுக்கு தெரியும், அவர்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தீர்க்கப்பட வேண்டும்.

பிப்.19ல் வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரியத்தின் கூட்டத்தில் இந்தியா ஒரு பார்வையாளராகவே கலந்து கொண்டது. டிரம்பின் காசா அமைதி திட்டத்தின் முயற்சிகள், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்த்தை இந்தியா ஆதரித்துள்ளது.

வங்கதேசத்தில் பிப்.17ல் பதவியேற்ற புதிய அரசுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் உள்ளோம். புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட காத்திருக்கிறோம். அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தைக் குழு அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் என எதிர்பார்க்கிறோம்.

ஈரானில் நிலவி வரும் பதற்றத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். அங்குள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.

இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் பேட்டியின் போது கூறினார்.

Source link