ஐ.எஸ்.எல்., கால்பந்து: கோவா அணி வெற்றி

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது கோவா. லீக் போட்டியில் 2-0 என, முகமதன் அணியை வென்றது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் முகமதன், கோவா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய கோவா அணிக்கு மோரெனோ (4வது நிமிடம்), டெஜான் டிராஜிக் (32வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய முகமதன் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பெற்றது. இதுவரை விளையாடிய 2 போட்டியில், ஒரு வெற்றி, ஒரு ‘டிரா’ என, 4 புள்ளிகளுடன் கோவா அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

Source link