மிலன்: குளிர்கால ஒலிம்பிக் ஐஸ் ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி 3வது முறையாக தங்கம் வென்றது.
இத்தாலியில், குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான ஐஸ் ஹாக்கி பைனலில் அமெரிக்கா, கனடா அணிகள் மோதின. இதில் அமெரிக்க அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 3வது முறையாக (1998, 2018, 2026) தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. தவிர இது, குளிர்கால ஒலிம்பிக் அரங்கில் அமெரிக்க பெண்கள் அணிக்கு கிடைத்த 8வது பதக்கம். ஏற்கனவே 4 வெள்ளி (2002, 2010, 2014, 2022), ஒரு வெண்கலம் (2006) வென்றிருந்தது.
மற்ற உலக செய்திகள்
மான்செஸ்டர் யுனைடெட் அபாரம்
லண்டன்: பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து ‘பிளே-ஆப்’ சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து), அத்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 5-0 (3-0, 2-0) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. இதில், ஜெர்மனியின் பேயர்ன் முனிக் அணியை சந்திக்கிறது.
எக்ஸ்டிராஸ்
* டில்லி ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, திக்விஜய்பிரதாப் சிங் ஜோடி 3-6, 4-6 என தென் கொரியாவின் ஜி சங் நாம், பின்லாந்தின் பாட்ரிக் நிக்லஸ்-சால்மினன் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
* பெங்களூருவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 6-3, 1-6, 6-4 என, ஆஸ்திரேலியாவின் டெய்லா பிரஸ்டனை வீழ்த்தினார்.
* டில்லி மாரத்தான் ஓட்டத்தின் 11வது சீசன் நாளை நடக்கவுள்ளது. இதனை, முன்னாள் இந்திய வீரர்களான விஜேந்தர் சிங் (குத்துச்சண்டை), ரோகன் போபண்ணா (டென்னிஸ்) கொடியசைத்து துவக்கி வைக்கின்றனர்.
* சண்டிகரில், இந்திய ஓபன் நடை போட்டி தொடர் இன்று துவங்குகிறது. இதில் 21 கி.மீ., பாதி மாரத்தான், 42 கி.மீ., மாரத்தான் போட்டிகள் அறிமுகமாகின்றன. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியாவின் அக் ஷ்தீப் சிங், பரம்ஜீத் சிங் பிஷ்ட், சூரஜ் பன்வர், விகாஸ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
* ‘டி-20’ உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இங்கிலாந்தின் ஜோனாதன் டிராட் 44, விலகினார்.
