கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சீனாவை தைவான் முந்தியிருப்பதாக, அமெரிக்க வர்த்தக துறையின் தரவுகள் தெரிவித்துள்ளன.
கடந்த டிசம்பரில், சீனாவின் சரக்கு இறக்குமதி முந்தைய ஆண்டின் இதே மாதத்தைவிட 44 சதவீதம் அதாவது 1.91 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில், தைவானிலிருந்து 2.18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தைவானிலிருந்து சிப், ஏ.ஐ., சர்வர்கள், தகவல் தொடர்பியல் மற்றும் ஆடியோ விஷூவல் பொருள்கள் அதிகளவில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023ல் தைவானின் சரக்கு ஏற்றுமதி அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைவிட சீனாவுக்கு அதிகமாக இருந்தது.
